சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் அபூர்வ ராகங்கள் என்ற தொடரில் பத்மினி வேடத்தில் நடித்து வருகிறார் ஏகவள்ளி.
சீரியல்களில் சமீபகாலமாக அதிக வன்முறை காட்சிகள் வருகிறது என்ற செய்திகள் வந்தன. இதைப்பார்த்த ஏகவள்ளி மக்கள் எந்த மாதிரியான சீரியல்களுக்கு அதிக வரவேற்பு கொடுக்கிறார்களோ அதை மனதில் கொண்டுதான் சீரியல்கள் உருவாகின்றன.
சீரியல்களில் சொல்லப்படும் விஷயங்கள் எல்லாமே நாட்டு நடப்புகள்தான். மக்கள் மத்தியில் நடக்கிற விஷயங்களை தான் கதையாக்குகிறார்கள்.
சீரியல்களை தவறாக விமர்சனம் செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் ஏகவள்ளி.