இந்திய மத்திய அரசின் உயர் மட்ட குழுவினர் ஆகஸ்ட் மாதம் 10 மாதம் திகதி இலங்கைக்கு வருகின்றனர்.
அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் வரும் இந்த உயர் மட்ட குழுவினர் மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பதுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள மனித வள உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே தகவல் தொழில்நுட்ப, உள்ளூராட்சி நிர்வாகம் மற்றும் நகர அபிவிருத்தி மத்தியமைச்சர் கே.டி. ராமா ராஹோ தலைமையிலான குழுவினர் இலங்கை வருகின்றனர்.
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் இணைந்து அரசாங்கம் மனித வள உச்சி மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் உலக வங்கியின் பணிப்பாளர் கலாநிதி அமிட் றோர் ஆகியோர் விசேட உரை நிகழ்த்த உள்ளனர்.
இலங்கை – இந்திய கூட்டு ஆணைக்குழுவில் தீர்மானிக்கப்பட்ட உத்தேச பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப கூட்டு ஒப்பந்தம் குறித்து இந்திய மத்தியரசின் உயர் மட்ட குழுவினர் அவதானம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.