மலேசியாவில் பல்வேறு தொழில்வாய்ப்புகள்…!

229

இலங்கைத் தொழின்மையாளர்களுக்கும் பயிற்றப்பட்ட ஊழியர்களுக்கும் மலேசியாவில் தொழில்வாய்ப்புகளை வழங்க மலேசியா இணக்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான உடன்படிக்கை இவ்வருட இறுதியில் இருநாடுகளுக்குமிடையே கைச்சாத்திடப்படவுள்ளது.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மலேசிய பிரதிப் பிரதமர் அஹமட் சஹீட் ஹமீட் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

இரு நாடுகளுக்குமிடையேயான உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாகவும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மலேசியாவுக்கான ஒரு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளுமாறு மலேசியப் பிரதிப் பிரதமர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, மிக அண்மையில் மலேசியாவுக்கு விஜயம் மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.malasiya

SHARE