காதலிக்க மறுத்ததால் உயர் தர மாணவிக்கு நடந்த அவலம்!! பின்னர் மாணவர் எடுத்த அதிரடி முடிவு….

269

இந்திய உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் தப்பால் என்ற இடத்தில் உள்ள கல்லூரியில் சந்தீப் மாலன் என்ற மாணவர் உயர் தரத்தில் படித்து வந்துள்ளார்.

அதே கல்லூரியில் மாணவி நேகா என்பவரும் அவருடன் உயர் தரத்தில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இருவரும் அலிகார் அருகில் உள்ள பக்கத்து பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் நட்புடன் பழகி வந்துள்ளனர்.

இதை தொடர்ந்து, சந்தீப் நேகாவின் மீது காதலில் விழுந்துள்ளார். தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை அவர் ஏற்க மறுத்து விட்டார்.

இதனால் ஏற்பட்ட வெறுப்பு காரணமாக, நேற்று மதியம் கல்லூரியில் தேர்வு நடந்து கொண்டிருந்த வகுப்பறைக்குள் புகுந்த சந்தீப், மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியால் நேகாவின் தலையை நோக்கி சுட்டுள்ளார்.

இதில் மாணவி அதே இடத்தில் இரத்த வெள்ளத்தில் பலியானார். பிறகு சந்தீப்பும் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.dath01

SHARE