இணையதளங்களில் சிக்கலான படத்தால் சமந்தா அதிர்ச்சியில்…

277

நடிகை சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.

செப்டம்பர் 23-ந் திகதி ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமண நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் நடைபெறும் என்று தெரிகிறது.

சமந்தா, நாக சைதன்யா இருவரும் ஒரே வீட்டில் தங்கி இருக்கும் வீடியோ மற்றும் அவர்கள் ஜோடியாக வெளியே சென்று வரும் படங்கள் இணையதளங்களில் வெளிவந்து ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சமந்தாவின் கவர்ச்சிப் படங்களும் இணையதளங்களில் பரவி அவரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தற்போது விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள சமந்தா சினிமாவில் அறிமுகமான புதிதில் பிரபலமில்லாத சிறிய நடிகர்களுடன் நடித்தார்.

காதல் மற்றும் படுக்கை அறை காட்சிகளிலும் நெருக்கமாக நடித்து இருந்தார். அப்படி அவர் நடித்த படங்களில் ஒன்று ‘மாஸ்கோவின் காவேரி.

இதில் கதாநாயகனாக ராகுல் ரவீந்திரன் நடித்து இருந்தார். இந்த படம் 2010-ல் வெளிவந்து தோல்வி அடைந்தது. அந்த படத்தில் சமந்தா கவர்ச்சியாக நடித்து இருந்த காட்சிகளை தற்போது இணையதளங்களில் யாரோ வெளியிட்டு அவை வேகமாக பரவி வருகின்றன.

அவற்றை ரசிகர்கள் பலரும் பதிவிறக்கம் செய்து பார்த்து வருகிறார்கள். அத்துடன் சமந்தாவின் தற்போதைய மார்க்கெட் உயர்வு நிலவரத்தை கருத்தில் கொண்டு தோல்வி அடைந்த அந்த படத்தை தூசி தட்டி மீண்டும் மறு வெளியீடு செய்து காசு பார்க்கவும் ஏற்பாடுகள் நடக்கிறது.

இதுவும் சமந்தாவை வருத்தப்படுத்தி உள்ளது. அதனை தடுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக சமந்தா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை.

Actress Samantha Hot Spicy Half Saree Photoshoot Pics

SHARE