சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கராத்தே அணியினர்கலாகிய நாங்கள் இன்று அதிகாலை வெற்றியுடன் நாடு திரும்பின
கடந்த 19, 20, 21 /07/2016 ஆகிய தினங்கலில் நடந்து முடிந்த சீன கராத்தே போட்டியில் 9 தங்க பதக்கங்களும், 9 வெள்ளி பதக்கங்களும், 3 வெண்கல பதக்கங்களும் எமது வீரர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
நாடு திரும்பிய வீரர்கள் கட்டுநாயக்க விமான நிலயத்தில் பதக்கங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இங்கே காணலாம்.
இப்போட்டியானது தனி நபர் காட்டா, தனி நபர் குமித்தே, குழு காட்டா, குழு குமித்தே என நான்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நான்கிலும் கலந்து கொண்டு குறித்த பதக்கங்களை எமது வீரர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் சகல விளையாட்டுக்கலிலும் அதிக பதக்கங்களை பெற்று வரும் சீனா எதிர்வரும் 2020 இல் நடைபெற இருக்கின்ற ஒலிம்பிக் போட்டியில் கராத்தே மூலமாக அதிக பதக்கங்களை பெற இப்போதில் இருந்தே சீனா முயற்சி செய்கிறது. ஆனாலும் சாத்தியம் குறைவாகவே காணப்படுகிறது.