ஊர்காவற்றுறை கடற்படைத் தளங்களில் கடற்பரப்பை நோக்கி சி.சி.ரி.வி. தொழில்நுட்பக் கெமராக்கள் பொருத்தப்படுகின்றன.
இப்பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை கடற்படையினரின் முகாமின் வெளிப்புறங்கள் தோறும் இவ்வாறு நவீன கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட, நீருக்கு அடியில் இயங்கும் பாதுகாப்பு கெமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.