ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள சுமார் 100 தொழிலாளர்களில் இலங்கையர்களும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பணிக்கான அனுமதிகாலம் காலாவதியானமை, சம்பளம் வழங்கப்படாமை, போதிய உணவு, நீர் மற்றும் சுகாதார வசதிகள் இன்மையால் குறித்த தொழிலாளர்கள் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர்.
நாடு திரும்புவதற்கு பணமோ உரிய ஆவணங்களோ இன்றி தாம் உள்ளதாக காணொளி ஒன்றின் ஊடாக நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் கூறியுள்ளார்.
அபுதாபியின், கயந்தி என்ற பகுதியிலுள்ள முகாமில் தாம் உள்ளதாகவும் ஸ்ரீலங்கா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் பிரஜைகளே இவ்வாறு நிர்க்கதிக்கு உள்ளதாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதமே இறுதியாக தமக்கு சம்பளம் வழங்கப்பட்டதாகவும் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.