வரலாறு படைத்த இந்தியா.. பாராட்டு மழையில் நனையும் அஸ்வின், கோஹ்லி

268

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதனால் இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அணித்தலைவர் விராட் கோஹ்லி, சகலதுறை வீரராக அசத்திய அஸ்வின் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ஆண்டிகுவாவில் நடந்த முதல் டெஸ்டில் அணித்தலைவர் விராட் கோஹ்லியின் இரட்டைசதம், அஸ்வினின் அசத்தல் சதம் மற்றும் 2வது இன்னிங்ஸில் எடுத்த 7 விக்கெட்டுகள் ஆகியவற்றால் இந்தியா அபார வெற்றியை பெற்றது.

ஆசிய நாடுகளுக்கு வெளியே இந்திய அணிக்கு மிகப் பெரிய வித்தியாசத்திலான டெஸ்ட் வெற்றி இதுதான். இந்தப் போட்டியில் அஸ்வின் தான் ரியல் ஹீரோவாக ஜொலித்தார்.

முதல் இன்னிங்சில் அஸ்வின் 113 ஓட்டங்களை குவித்து அணியின் ஓட்டங்களை உயர்த்தினார். அதுவும் 6வது நிலை வீரராக களமிறங்கி இந்த சதத்தை விளாசினார். இது அவருக்கு 3வது டெஸ்ட் சதமாகும்.

தொடர்ந்து பந்தை கையில் எடுத்த அஸ்வின் 2வது இன்னிங்சில் 7 விக்கெட்களை அள்ளினார். வெளிநாடு ஒன்றில் அஸ்வினின் சிறந்த பந்து வீச்சு இதுதான். அஸ்வின் 17வது முறையாக 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார். மொத்தம் அவர் 33 டெஸ்ட் போட்டிகளே விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள இந்திய அணிக்கு சச்சின், ஜடேஜா, லட்சுமண், ஷேவாக் என பலரும் வாழ்த்து கூறியுள்ளனர்.

625.500.560.350.160.300.053.800.748.160.70 (3)

SHARE