சென்னை மாவட்ட அளவிலான கோ கோ போட்டியில் சென்னைவேலம்மாள் நிறை நிலை மேல்நிலை பள்ளி ஆடவர் அணி முதலிடம் பெற்றது.
ரத்தின வேல் சுப்பிரமணியன் நினைவு கோப்பை சார்பாக சென்னை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி பக்தவட்சலம் வித்யாஷ்ரமம் பள்ளியில் கடந்த 21ம் திகதி நடைபெற்றது.
இதில் 22 அணிகள் பங்கேற்று விளையாடின, கோ கோ இறுதிப் போட்டியில் சென்னை வேலம்மாள் நிறை நிலை மேல்நிலைபள்ளி ஆடவர் அணி முதலிடம் பெற்று பரிசுத் தொகையான 3600 ரூபாய் பெற்று கொண்டது.
இதேபோன்று கோ கோ போட்டியில் பெண்கள் அணியும், Throw Ball போட்டியில் பெண்கள் அணியும் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.