கோஹ்லிக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரிச்சர்ட்ஸ் மகன்

271

இரட்டை சதம் அடித்த வீராட் கோஹ்லிக்கு, ரிச்சர்ட்ஸ் மகன் மாலி தான் வரைந்த ஓவியம் ஒன்றை அவருக்கு பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் வீராட் கோஹ்லி இரட்டை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

கோஹ்லி இரட்டை சதம் அடித்ததை அடுத்து, மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ரிச்சர்ட்ஸ் மகன் மாலி தான் வரைந்த ஓவியத்தை பரிசாக கொடுத்துள்ளார்.

மேலும் இதுகுறித்து மாலி கூறியதாவது, வீராட் கோஹ்லி அவர்கள் தங்கள் சொந்த ஊரான ஆண்டிகுவாவில் இரட்டை சதம் அடித்தது மகிழ்ச்சியாக இருந்தது.

எனவே இதை கெளரவிக்கும் வகையில் அவருடைய ஓவியத்தை தான் வரைந்தேன். மேலும் இந்த ஓவியத்தை ஒரே நாளில் வரைந்து முடித்து விட்டதாகவும் கூறினார்.

கிரிக்கெட் வீரரான மாலி, 18 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.500.400.194.800.668.160.90 (9)

SHARE