வீதி விபத்துக்களை குறைக்கும் வகையில் அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் திடீர் சோதணைக்குட்படுத்தப்பட்டது
நுவரெலியா மாவட்ட வாகண பரிசோதகர் மற்றும் அட்டன் பொலிஸாரும் இணைந்து நடத்திய சோதணையில் 100 மேற்பட்ட முச்சக்கரவண்டிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது
முச்சக்கரண்டிகளினால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதனால் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் சேவையிலீடுபடமுடியாத குறைபாடுகளுடைய முச்சக்கரண்டிகள் அதிக அலங்காரம் செய்யப்பட்ட தேவையற்ற உபரணங்கள் பெருத்தப்பட்டவை பேன்ற முச்சக்கரண்டிகள் சோதணையின் பின் தற்காளிக சேவையில் இடை நிறுத்பப்படுள்ளது
இனம் காணப்பட்ட குறைபாடுகளை 14 நாட்களுக்குள் திருத்தியமைத்து அட்டன் பொலிஸ் நிலையத்தில் காட்டிய பின் வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டு மீண்டும் சேவையில் ஈடுபட முடியும் என வாகன பரிசோதகர் எம்.எம்.ஜீ பண்டார தெரிவித்தார் மேலும் இவ்வாறான திடீர் சோதணைகள் நுவரெலியா மாவட்டம் முழுவதும் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்