போர்த்துகல் நாட்டின் Algarve Albufeira என்ற ஹொட்டலில் தங்கியிருந்த நபர் ஒருவர் 5 ஆவது மாடியில் உள்ள பால்கனி ஒன்றில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த நபர்(28) பிரித்தானியாவை சேர்ந்த சுற்றுலாப்பயணி என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் இடம் பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த நபருடன் இரண்டு நண்பர்கள் ஹொட்டலிற்கு வருகை தந்ததாகவும், இவர் மாடியில் இருந்து விழுந்த போது மற்றைய இரண்டு நண்பர்களும் தூங்கிக் கொண்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரும் அதிகளவில் குடிபோதையில் இருந்ததாகவும் இதன் காரணமாகவே இந்த சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.