53 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட வீரரின் உடல்

357

625.500.560.350.160.300.053.800.748.160.70 (2)

சுவிட்சர்லாந்தின் பெர்னியா மாசிவ் பனிமலையில், கடந்த 1963ம் ஆண்டு காணாமல் போன ஜேர்மனி பனிச்சறுக்கு வீரரின் உடல் தற்போது கிடைத்துள்ளதாக பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட உடலை டிஎன்ஏ ஆய்வு செய்ததில், அது காணாமல் போன ஜேர்மனி வீரரின் உடல் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த 1963ம் ஆண்டு ஆகஸ்ட 30ம் திகதி அவர் பயணம் மேற்கொள்வதற்கு முன்பு அவரை கடைசியாக பார்த்தாக கூறப்படுகிறது, அப்போது அவரின் வயது 36 என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிசார் அளித்துள்ள தகவலில், கிட்டதட்ட காணாமல் போன 40 பேரின் உடல் இன்னும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும், மலையேறுபவர்கள் எஞ்சியுள்ள உடல்களை கண்டறிந்தால், அதை கைகளால் தொடாமல், புகைப்படம் எடுத்து பொலிசாருக்கு தகவல் கொடுக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்.

SHARE