பாடசாலைகளை குறிவைக்கும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்க வேண்டும்!

256

download (2)

பாடசாலை மாணவர்களை குறிவைத்து பாடசாலைகளுக்கு அருகில் சட்டவிரோத போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை தடுப்பதற்கு போதைப்பொருள் ஒழிப்பு என்ற வேலைத்திட்டம் முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எதிர்கால தலைமுறைகளின் பாதுகாப்பு குறித்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

காலி கத்தலுவ மத்திய கல்லூரியில் இன்று இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதிதாக கட்டப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுக்கூட திறப்பு விழாவிலும் ஜனாதிபதி கலந்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ்களை ஜனாதிபதி வழங்கி வைத்துள்ளார்.

குறித்த நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், அமைச்சர் சந்திம வீரகொடி, அரச பிரமுகர்களான சந்திரலால் அபேகுணவர்தன மற்றும் விஜயபால ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE