கனடா வெளிவிவகார அமைச்சர் இன்று பிரதமரை சந்திக்கவுள்ளார்!

233

Stéphane Dion

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள கனடா வெளிவிவகார அமைச்சர் ஸ்டெபன் டியோன் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்திக்கவுள்ளார்.

13 வருடங்களுக்கு பின்னர் கனடா வெளிவிவகார அமைச்சர் ஒருவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளது இதுவே முதல் தடைவையாகும்.

கனடா வெளிவிவகார அமைச்சரை நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் வரவேற்றனர்.

இதேவேளை, அமைச்சர் ஸ்டெபன் டியோன் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நாளைய தினம் வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதுடன் அங்கு வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேவையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை – கனடாவுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் கனடாவிற்கான வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டயோன் முன்னிலையில் தேசிய ஒன்றிணைதல் அமைச்சில் கைச்சாத்திடப்பட உள்ளதாக குறிப்பிட்ப்பட்டுள்ளது.

இதேவேளை கனேடிய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைசச்ர் மங்கள சமரவீர ஆகியோரை இன்று சந்திப்பார் என

தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டயோன் 13 வருடங்களுக்கு பிறகு நேற்றைய தினம் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

SHARE