சாலாவ இராணுவ முகாமில் வெடிப்பிற்கான காரணம் விரைவில் அறிவிக்கப்படும்!

280

IMG_0056

சாலாவ இராணுவ முகாமில் அண்மையில் இடம் பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த 3 விசாரணைகளும் தற்போது நிறைவடைந்த நிலையில் காணப்படுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர்பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெடிப்பு தொடர்பான விபரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை இராணுவ விசாரணை பிரிவு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தற்போது மேற்கொண்டு வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

சாலாவ வெடிப்பின் போது 1020 வீடுகள் சேதமடைந்ததாகவும் இவற்றினை திருத்தும் பணிகள் தற்போது இடம் பெற்றுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை வெடிப்பின் போது பாதிக்கப்பட்ட 800 மாணவர்களுக்கான பாடசாலை சீறுடைகளும், 1500 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களையும் இராணுவ சிப்பாய்கள் வழங்கி வைத்துள்ளார்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE