ஆரோக்கியம் தரும் எண்ணெய் குளியல்

345

நல்லெண்ணெய் மற்ற எண்ணெய்கள் போல் அல்லாமல், உடலில் கொழுப்பு சேர விடாமல் தடுப்பது தான் இதன் தனிச்சிறப்பு.

கொழுப்பை தடுக்கும் நல்லெண்ணெய், ரத்தத்தில் உள்ள கொழுப்பை அகற்றி, அதை சுத்திகரிக்கக் கூடியது. நல்லெண்ணெயில், சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது, எனவே, இதை உணவில் அதிகம் சேர்க்கும் போது, இருதயத்துக்கு, சரியான பாதுகாப்பை அளித்து, இருதய நோய் வராமல் தடுக்கிறது.

இதில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி, உடலில் நீரிழிவு வருவதை தடுக்கிறது.

ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது, எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்து கொள்ளும்.

எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது. பெண்கள், போதியளவு எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

இதிலிருக்கும் மக்னீசியம், ரத்த அழுத்தத்தை குறைக்க, பெரிதும் உதவி புரிகிறது. அதிலும் நீரிரிவு நோயாளிகளுக்கு, உயர் ரத்த அழுத்தம் இருந்தால், அவர்கள் நல்லெண்ணெயை சாப்பிடுவது நல்ல பலன் தரும்.

காலையில் எழுந்து, நல்லெண்ய்யால் வாயை கொப்பளித்தால், பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.

எண்ணெய் குளியல்

உடல் சூடால், பல்வேறு உபாதைகள் மனிதர்களை ஆட்டிப் படைக்கின்றன. இதற்காக, பல்வேறு மருந்துகளையும் எடுத்துக் கொண்டு, பலனில்லாத நிலையே ஏற்படுகிறது. இதற்கான சிறந்த மருத்துவமாக எண்ணெய் குளியல் இருக்கிறது.

வாரம் ஒருமுறை, எண்ணெய் குளியல் எடுப்பது, ஒருவகையான ஆயுர்வேத முறை. பெண்கள் வெள்ளிக்கிழமையிலும், ஆண்கள் சனிக்கிழமையிலும், நல்லெண்ணெய் குளியல் எடுப்பது, உடல் நலத்துக்கு நல்லது.

இக்குளியலின் மூலம், மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துகள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, அடர்த்தியாகவும் வளரும்.

வாரம் ஒருமுறை, தலையில் மசாஜ் செய்து குளித்தால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேறும். நரம்புகள் ரிலாக்ஸ் ஆகி, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

உடலில் தேய்த்து குளித்தால், சருமம் பொலிவோடு, மென்மையாக இருக்கும். பொடுகுத் தொல்லை இருந்தால், விரைவில் காணாமல் போகும்.

தூக்கம் இன்மையால் அவதிப்படுவோர், இம்முறையை கையாண்டால், ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். குளியல் முடித்ததும், பகலில் தூங்கக் கூடாது, உடல் சூட்டை அதிகரிக்கும் உணவு வகைகளுக்கு தடை போட வேண்டும்.

SHARE