நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த ஆட்சியாளர்கள்!

265

625.590.560.350.160.300.053.800.944.160.90 (1)

நாட்டை ஆட்சி செய்தவர்கள், தற்போது ஆட்சி செய்பவர்கள் என அனைவரும் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்தும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கலேவெல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதனால் அதிகமான பணம் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்கின்றது.

இன்று வீதிகளில் செல்லும் பெண்களை பார்த்தால் அவர்கள் தலைக்கு பூசும் எண்ணெய் முதல் பாதணிகள் வரை அனைத்தும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது.

பால்மா இறக்குமதிக்காக 34 கோடி டொலரும், சீனிக்காக 25 கோடி டொலரும், மிளகாய் இறக்குமதிக்காக 6 கோடி டொலரும், வெங்காயத்திற்கு 4 கோடி டொலருமாக நாட்டின் பணம் வெளிநாடுகளுக்கு வழங்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE