இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையா? போர்க்குற்றமா? சர்வதேச அரங்கில் குழப்பம்.

428

முப்பது வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த ஆயுதப்போராட்டம் தமிழ் மக்களுக்கான விடுதலையைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே முன்னெடுக்கப்பட்டது. பேர்ச்சுவார்த்தை என்கின்ற பொழுது தின்பு முதல் டோக்கியோ வரையிலான பேச்சுக்களும் நடந்து முடிந்துள்ளது. இதற்கிடையில் இப்போராட்டத்தின் பொழுது இதுவரையில் நான்கு லட்சம் மக்களும், எழுபத்திரண்டாயிரம் போராளிகளும் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதிலும் குறிப்பாக ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் ஒருலட்சத்தி நாற்பத்து நான்காயிரம் பேர் சிங்கள அரசாங்கத்தினால் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதில் வெள்ளைக்கொடி விவகாரமும் அடங்கும். தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் தொடர்பில் நோர்வே உட்பட 52 நாடுகள் சமாதானத்தீர்வு கிடைக்கவேண்டுமென்று மிகவும் கருசனையோடு செயற்பட்டார்கள். இதில் உலக வங்கி உட்பட 22 அரசசார்பற்ற நிறுவனங்களும் அடங்கும்.
விடுதலைப்புலிகளுடனான போரை முன்னெடுத்து வந்த சிறிமாவோ பண்டாரநாயக்க (1960-1955, 1970-1975) வில்லியம்கோபல்லவ (1972-1978), ஜெயார் ஜெயவர்த்தன (1978-1989) ரணசிங்கப் பிரேமதாஸ (1989-1993), டி.பி.விஜயதுங்க (1993-1994), சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (1995-2004), டி.மு.ஜெயரத்தின (2010-2014), மஹிந்த ராஜபக்ஷ (2005-2014), ரணில் விக்கிரமசிங்க (1993-1994, 2002-2004, 2015-2016), மைத்திரிபால சிறிசேன (2015-2016) இதில் மைத்திரிபால சிறிசேனாவைத் தவிர அணைத்து ஆட்சியாளர்களும் தமிழ் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் மோதிட்டவர்களே. தமிழினத்துடன் போரிட்டவர்கள் வரிசையில் இலங்கையில் ஆட்சி புரிந்தவர்களில் பதினாறு ஆட்சியாளர்கள் உள்ளடக்கப்படுகின்றனர். டி.எஸ் செனநாயக்கா தொடக்கம் மைத்திரிபால சிறிசேனா வரை இதில் ஜெயார் ஜெயவர்த்தனா காலப்பகுதியிலிருந்து ரணியில் விக்கிரமசிங்கா வரையிலான ஆட்சியாளர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கெதிரான போர் முன்னெடுக்கப்பட்டது. இதன்பொழுது தற்பொழுது ஜனாதிபதியாக இருக்கக்கூடிய மைத்திரிபால சிறிசேனா மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் சுகாதார அமைச்சராகச் செயற்பட்டதுடன், சிறிது காலம் பாதுகாப்பு அமைச்சராகவும் செயற்பட்டுள்ளார்.
தமிழர்களுக்கான தீர்வுத்திட்டங்கள் என்கின்ற பொழுது முப்பது வருடப் போராட்டச் சூழ்நிலையில் தீர்வைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற நோக்கில் பதினாறு ஆட்சியாளர்களுள் எந்த ஆட்சியாளர்களும் கருதிக்கொள்ளவில்லை. சர்வதேசம் பார்க்குமளவிற்கு தமிழ் மக்கள் பெரும் ஏமாற்றத்தையே அடைந்துள்ளனர்.

இனப்படுகொலை இடம்பெற்றதற்கான ஆதாரங்களை மூடிமறைப்பதற்காக தமிழர் தரப்பிற்கு இலங்கை அரசு பல நன்மைபயிக்கும் விடையங்களைச் செய்திருக்கின்றது. அதில் மிக முக்கியமானதொன்று தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கான எதிர்க்கட்சிப் பதவி. வடகிழக்கு பிரிக்கப்பட்ட நிலையில் அதற்கு முன்னர் மாகாண ஆட்சி முறைமை கொண்டுவரப்பட்டது. இந்த மாகாண ஆட்சியில் அதிகாரங்கள் குறிப்பாக காணி, பொலிஸ் என்பன நடைமுறையிலிருந்தும் இந்த மாகாணசபை அதனை நடைமுறைப்படுத்த முடியாத சூழ்நிலையே இதுவரையும் காணப்பட்டது. அப்படியாக இருந்தால் இந்த மாகாணசபையை தமிழ் இனத்திற்கு அரசாங்கம் வழங்கியிருப்பது உலக நாடுகளுக்கு நாம் ஜனநாயகப் பாதையில் செல்கின்றோம் என்பதைக் காட்டவே. வடமாகாணசபையில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் கிடப்பில் போடப்பட்டதாகவே இருந்து வருகின்றது. வடமாகாணசபையினால் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை தான் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த நிலையில் அது இலங்கை அரசினால் மறுக்கப்பட்டிருந்தது. இதற்காக காணாமல் போனவரைக் கண்டறியும் குழு நியமிக்கப்பட்டது. பரனகமவினுடைய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதை எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தனர். ஆசிய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது எனக் கூறிக்கொண்டிருந்தபொழுது, திடீரென இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை, போர்க்குற்றம் தான் இடம்பெற்றது எனக் கூறியதனைப் பார்க்கின்ற பொழுது இதனுடைய பின்னணியில் பல்வேறு காரணங்கள் உள்ளடக்கப்படுகின்றது. இவ் நாடுகள் அணைத்தும் மஹிந்த ராஜபக்ஷாவின் ஆட்சியைக் கவில்ப்பத்தில் குறியாக இருந்தார்கள். ஆகவே இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்ற தீர்மானம் சர்வதேச நீதிமன்றத்தினால் கொண்டுவரப்பட்டு அதற்கான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டது அதிலே மஹிந்த ராஜபக்ஷாவை மின்சாரக் கதிரையில் அமர்த்துவதற்கான அணைத்து அவணங்களும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. திடீரென அவை அணைத்தும் மறைக்கப்பட்டு போர்க்குற்றம் என்ற வரையறைக்குள் கொண்டுவரப்பட்டது. போர்க்குற்றம் என்கின்ற பொழுது போர்க்களத்தில் நடைபெற்ற வண்முறைகளுக்கான தீர்வுகளே இராணுவ நீதிமன்றத்தினால் வழங்கப்படும். இது இவ்வாறு இருக்க ஒரு விடயத்தைக் குறிப்பிடவேண்டும். என்னவென்றால் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமிடையில் ஏழு சர்வதேச பேசு;சுவார்த்தைகளும், 14 உள்ளுர்ப்பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றது. இதில் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் 2004ம் ஆண்டு இடைக்கால நிர்வாகம் கையளிக்கப்பட்டது. இதனுடைய வரலாறு அனைவரும் அறிந்ததே.
இவ்வாறான நிலையில் தான் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது 2006ம் ஆண்டு விடுதலைப்புலிகள் மீது மீண்டும் போர் கட்டவிழ்த்து விடப்பட்டது. மாவிலாறில் ஆரம்பித்த போர் முள்ளிவாய்க்காலில் முடிந்ததென்பது வரலாறு. தமிழ் மக்களுக்கான போராட்டம் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனால் முப்பது வருடம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மேற்குறிப்பிடப்பட்ட பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றுள்ள நிலையில், எப்படி இந்த அரசு பயங்கரவாதிகளுடன் ஒரு பேர்ச்சுவார்த்தையை நடத்தியிருக்கலாம். அனைத்துக் கட்டடமைப்புக்களையும் தமிழீழ விடுதலைப்புலிகள் கொண்டிருந்தனர். கடல் வான், தரை முப்படைகளையும் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளுடன் அரசியல் தீர்வுக்கான பேர்ச்சுவார்த்தைகளை அரசாங்கம் முன்னெடுத்துவிட்டு இறுதியாக இது உள்ளுர்ப் பிரச்சனை இங்கு இனப்படுகொலை இடம்பெறவில்லை. இது பயங்கரவாத்திற்கு எதிரான போர் என்று கூறிக்கொள்வதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்.
சர்வதேச நாடுகளின் சூழ்ச்சிகளும் இதில் அடங்குகின்றன. மஹிந்த ராஜபகஷாவின் ஆட்சியைக் கவில்த்து அவரை மின்சாரக் கதிரையில் அமர்த்துவோம் என்று கங்கனக்கட்டிக் கொண்டிருந்த சிங்களப் பேரினவாதக் கட்சிகள் இன்று மஹிந்த ராஜபகஷாவை மெத்தையில் வைத்து தாலாட்டுகின்றனர். மஹிந்த ராஜபகஷாவோ, அவரது சாகாக்களோ இனி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் சந்திரிக்கா அம்மையார் குறியாக இருக்கின்றார். தமிழ் மக்களுடைய தீர்வுத்திட்டம் என்பத்தில் இவ் ஆட்சியாளர்களுக்கு எந்தவித அக்கறையும் இல்லை. பதவி மோகத்தைக் கொடுத்து தமிழினத்தை விலைக்கு வாங்கலாம் என்ற நிலைப்பாட்டுக்குள் தற்பொழுது இலங்கை அரசு செயற்பட்டு வருகின்றது. எதிர்க்கட்சிப் பதவியை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்டுள்ளமையானது.

இன்னுமின்னும் பாரிய நெருக்கடியளைத் தோற்றுவிக்குமே தவிர தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டமாக அது அமையமுடியாது.
வடமாகாணசபையின் செயற்பாடுகளும் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டமாக அமையமுடியாது. இலங்கையில் தீர்வுத்திட்டங்கள் தொடர்பாக அணைத்துத் தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை முடிந்தது. தற்பொழுது நாடுகாடந்த தமிழீழ அரசாங்கத்துடனான பேச்சுக்களில் ஈடுபடுவதற்கான முன்னெடுப்புக்களை முன்னெடுத்து வருகின்றது.

genocide-930
இவை தமிழ் மக்களை பாரிய பொறிக்கிடங்கில் தள்ளும் ஒரு செயற்பாடாகும். நாடுகாடந்த தமிழீழ அரசாங்கமும் இல்லையென்றால் சர்வதேச ரீதியாக தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க இங்கு யாருமில்லை. அரசாங்கத்திற்கு மிகவும் இலகுவாக எல்லாமும் அமைந்துவிடும். இன்று தமிழ் மக்களுடைய போராட்டத்தையும், அதனுடைய தியாகங்கiளுயும் சர்வதேச நாடுகளில் தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். சர்வதேச நாடுகளினுடைய தலையீட்டினால் பல்வேறு விடையங்கள் தமிழ் மக்களுக்கு நன்மையை விளைவித்துள்ளன.

தீர்வுத்திட்டம் என்கின்ற பொழுது அதற்கான மூல தந்திரோபயங்கள் எதுவுமே இல்லையென்று அரசாங்கத்தினால் கூறப்படுகின்றது. தமிழ் மக்களுடைய நீண்டகாலப் போராட்ட வரலாற்றை குழிதோண்டிப் புதைக்கும் ஒரு செயற்பாடாகவே இச் செயற்திட்டம் யாவும் அமையப்பெற்றுள்ளது. சர்வதேச நாடுகள் தற்பொழுது இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையா? அல்லது போர்க்குற்றமா? என்ற சந்தேகத்தில் தமிழர் நிலை தொடர்கின்றது.

eezham-genocide08 tamilgenocide_tamilnatonal_2

SHARE