கூட்டு எதிர்க்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதயாத்திரையின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கண்டியிலிருந்து ஆரம்பமான குறித்த பாதயாத்திரையில் கெடம்ப சந்தியில் வைத்து அரச அம்பியூலன்ஸ் வண்டி ஒன்றுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதயாத்திரையில் கலந்து கொண்ட கூட்டு எதிர்க்கட்சியினர் கற்களைக் கொண்டு அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதாகவும் செய்தியாளர் கூறினார்.
இது தொடர்பாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா கருத்து தெரிவிக்கையில், “ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையில் எதிர்பார்த்த அளவுக்கு மக்களின் பங்குபற்றல் குறைவடைந்திருக்கின்றது” என்றார்.
மேலும், இந்தப் பேரணி கொழும்புக்கு வரும்போது 4 அல்லது 5 பேருடன்தான் வந்து சேரும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், இந்தப் பேரணி கொழும்புக்கு வரும்போது 4 அல்லது 5 பேருடன்தான் வந்து சேரும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
You may like this video
The support team is led by Mahinda pilgrimage