உயிருக்கு போராடிய பெண்! கோவாவில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

326

625.167.560.350.160.300.053.800.300.160.90

ஓமான் தலைநகர் மஸ்கட்டில் இருந்து சென்னை நோக்கி பயணித்த ஓமன் ஏயார் விமானம் கோவாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நல குறைவு காரணமாக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணியளவில், அந்த விமானம் கோவாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து குறித்த பெண் வைத்தியசாலைக்கு அனுப்பிய பின்னர் விமானம் திட்டமிட்டபடி கோவாவில் இருந்து சென்னைக்கு வந்து சேர்ந்ததுள்ளது.

எனினும், வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட பெண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் தற்போது அரச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்த பெண்ணின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறன.

SHARE