நயன்தாராவால்… கொந்தளிக்கும் வெங்கடேஷ்!

222

தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் நடிகை நயன்தாரா மீது புகார் கூறப்பட்டுள்ளது. நடிகர் வெங்கடேஷ்- நயன்தாரா இடையே ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாகவே இந்தப் புகார் கூறப்பட்டுள்ளது.

மோதல்
தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக ‘பாபு பங்காராம்’ என்ற படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பில் நயன்தாராவுக்கும் வெங்கடேசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது

மறுப்பு
இந்த படத்தில் நயன்தாரா, வெங்கடேஷ் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி உள்ளது. இந்த பாடல் காட்சியில் நடிக்கும்படி நயன்தாராவை அழைத்தனர். ஆனால் ஏற்கனவே அளித்த கால்ஷீட்டுகளை படக்குழுவினர் விரயம் செய்து விட்டதாக கூறி அதில் நடிக்க மறுத்து விட்டார். நயன்தாராவின் பிடிவாதத்தால் படம் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக படக்குழுவினர் குற்றம் சாட்டினர். வேறு வழியின்றி பாடல் காட்சியை படமாக்காமலேயே படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.

அதெல்லாம் முடியாது
இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. அதில் கலந்து கொள்ளுமாறு நயன்தாராவை அழைத்தனர். ஆனால் அந்த விழாவிலும் அவர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டார். இதுபோன்ற விழாக்களில் பங்கேற்க மாட்டேன் என்பதை படம் ஆரம்பிக்கும்போதே நயன்தாரா சொல்லிவிடுவார். இந்தப் படத்திலும் தன் பாலிசியை விட்டுத் தரவில்லை.

புகார்
நயன்தாராவின் நடவடிக்கைகள் வெங்கடேசுக்கும் படக்குழுவினருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தின. அவர் மீது தெலுங்கு நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்களில் புகார் அளித்துள்ளனர்.

இரண்டாவது முறை
நயன்தாரா மீது ஏற்கெனவே இதே காரணங்களுக்காக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் ஒரு ஆண்டு காலம் தெலுங்கு சினிமாவில் அவர் நடிக்க தடை விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.nayan-venkatesh

SHARE