ஒலிம்பிக் சின்னத்துடன் போதை மருந்து விற்பனை! ரியோவில் பரபரப்பு

274

625.500.560.350.160.300.053.800.748.160.70 (4)

ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ள மரக்காணா மைதானத்திற்கு அருகில் ஒலிம்பிக் சின்னம் அச்சிடப்பட்ட போதை பொருளான கோகையின் பாக்கெட்டுகளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் அடுத்த மாதம் களைகட்டவிருக்கிறது. இந்த ரியோ டி ஜெனிரோ பிரேசிலின் 2வது மிகப் பெரிய நகரம். சுமார் 70 லட்சம் மக்கள் தொகைக் கொண்டது.

உலகின் 207 நாடுகளில் இருந்து 17 ஆயிரம் வீரர் வீராங்கனைகள் அதிகாரிகள், பயிற்சியாளர்கள் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ள மரக்காணா மைதானத்திற்கு அருகில் 93 கோகையின் பாக்கெட்டுகளை ரியோ பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட 93 பாக்கெட்டுகளிலும் ஒலிம்பிக் சின்னம் அச்சிடப்பட்டிருப்பதாக ரியோ நகர ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒலிம்பிக் சின்னத்தையே கோகையின் பாக்கெட்டுகளில் அச்சடித்து, போதை மருந்து கும்பல் விற்பனை செய்வது பிரேசில் அரசுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரியோ நகரம் முழுவதும் பரவலாக ஒலிம்பிக் சின்னம் அச்சிடப்பட்ட பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இதனால் இந்த போதை மருந்து கும்பலை பிடிக்க நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக பிரேசில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

SHARE