ஆக்ரோஷமாக விளையாடுவோம்: அமித் மிஸ்ரா

320

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் நாளை தொடங்குகிறது.

இதற்காக இரு அணி வீரர்கள் சிறப்பான முறையில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.

இதுகுறித்து சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா கூறுகையில், கும்ப்ளேயுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம்.

பந்துவீச்சு குறித்து நிறைய கற்றுக் கொடுக்கிறார், அவரது அறிவுரை தான் முதல் டெஸ்டில் சிறப்பாக செயல்பட காரணமாக இருந்தது.

முதல் டெஸ்டில் வெற்றி பெற்றாலும் அதனை கவனத்தில் கொள்ளாது அடுத்த போட்டிகளில் விளையாட வேண்டும், அப்போது தான் வெற்றியை தக்கவைக்க முடியும், இந்தியா தொடர்ந்து தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

SHARE