தமிழ் சினிமாவில் ஒரு சிலரே தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர்கள். அந்த வகையில் தன்ஷிகாஅரவான், பரதேசியை தொடர்ந்து கபாலியில் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
இவரின் யோகி கதாபாத்திரத்தை பாராட்டதவர்கள் இல்லை, இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘இந்த படத்திற்காக ரஞ்சித் சார் என்னை அழைத்து முடி வெட்ட முடியுமா? என்று கேட்டார்.
நான் உடனே ஓகே சொல்லிவிட்டேன், ரஞ்சித் சார் “நல்லா யோசிங்க” என்றார், முழுமனதாக நான் சம்மதம் என்றேன், இதை தொடர்ந்து முடி வெட்டிய பிறகு எனக்கே என்னை மிகவும் பிடித்தது.
அதே கெட்டப்பில் ரஜினி சார் முன்பு நின்ற போது, “சூப்பர்மா, செம்ம கெட்டப்” என்று பாராட்டினார்’ என கூறியுள்ளார்.