போதை மருந்து கடத்தலுக்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை – நடிகை மம்தா புலம்பல்

252

போதை மருந்து கடத்தலுக்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என மும்பை நடிகை மம்தா குல்கர்னி தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் 2,௦௦௦ கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், மம்தாவுக்கும், அவரது கணவர் என கூறப்படும் கென்யாவைச் சேர்ந்த விக்கி கோஸ்வாமிக்கும் தொடர்பிருப்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து சி.பி.ஐ., மூலம் அவர்களுக்கு, ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் வழங்க சர்வதேச பொலிசிடம் மஹாராஷ்டிர பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

இந்நிலையில் மம்தா குல்கர்னி பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஆன்மீகத்தில் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக, திரையுலகை விட்டு 1995ல் விலகினேன்.

போதை மருந்து கடத்தலுக்கும், எனக்கும் எந்த தொடர்புமில்லை. இந்த வழக்கை வைத்து, தாங்கள் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக சில பொலிஸ் அதிகாரிகள் என்னை திட்டமிட்டு சிக்க வைத்து விட்டனர்.

அவ்வாறு போதைபொருள் கடத்தினேன் என்றால் நான் ஏன் கென்யாவில் வாடகை வீட்டில் வசிக்க வேண்டும், விக்கி கோஸ்வாமிக்கும் என் கணவர் கிடையாது, என் நண்பர், அவருடன் பழகியதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு என கூறியுள்ளார்.

201604292005558037_Drug-Hoarding-Actress-Mamta-Kulkarni-with-husband-caught_SECVPF

SHARE