மட்டுவில் மருத்துவ பீட மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில்!!

260

மட்டக்களப்பில் இன்று 12. 30 மணியளவில் 300 க்கும் மேற்படட மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டு  வருகின்றனர் .

பல நிர்மாண பணிகளை நிறைவு செய்து புதிய கட்டிடத்தை கையளிக்க கோரியும் ,இலவச கல்வியை  பாதுகாப்போம், SAITM  எனும் திருட்டுக் கடையை மூடு என இன்னும் பல   கோரிக்கைகளை  முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை அரசடி மருத்துவ பீடத்துக்கு அருகாமையில் முன்னெடுத்து வருகின்றனர் .

அதே சமயம் கிழக்கு பல்கலை கழகத்துக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

63991aed-4a23-4149-b869-f2371d9e2b8d 64465a46-2e04-4482-afd9-81f820c7c56d be3bc29c-55fe-4d06-ad52-3e4a4c53557e

SHARE