ஆரோக்கியமான மக்களை உருவாக்கும் பணியின்போது நோய்களைத் தடுக்கும் சேவையினை பலப்படுத்துதல் வேண்டும். – ஜனாதிபதி

255

ஆரோக்கியமான மக்களை உருவாக்கும் பணியின்போது நோய்களைத் தடுக்கும் சேவையினை பலப்படுத்துதல்

வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்

மக்களுடன் மிக நெருக்கமாக பணியாற்றும் பிரிவினர் என்ற ரீதியில் பொது சுகாதார பரிசோதகர்களிடம்

பாரியதொரு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இன்று (28) முற்பகல்

கடவத்தையில் இடம்பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர்களின் 81வது ஆண்டு பொதுக்கூட்டத்தில்

உரையாற்றியபோதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

பொதுச் சுகாதார சேவையின் தரம் மற்றும் நியமங்களை மேம்படுத்துவதற்காக கடந்த வரவு செலவு திட்டத்தின்

மூலம் அரசு கூடுதலான நிதியினை ஒதுக்கி உள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், பொதுச் சுகாதார

உத்தியோகத்தர்களின் வரப்பிரசாதங்கள் மற்றும் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அரசினால் மேற்கொள்ளப்பட

வேண்டிய சகல விதமான பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்கு தயக்கமின்றி செயற்படுவதாகத் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் தான் சகல தொழிற்சங்கங்களுடனும் நட்புறவுடன் மோதல்கள் எதுவுமின்றி

நடவடிக்கை மேற்கொண்டிருந்தமையை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், இவ் அனுபவங்களை தனது அரசியல்

வாழ்க்கையில் ஒரு முக்கிய பாடமாக கருதுவதாகக் குறிப்பிட்டார்.

103 ஆண்டுகள் பலமை வாய்ந்த ஒரு சேவையாகக் காணப்படும் பொதுச் சுகாதார பரிசோதகர் சேவை

ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் அன்று கிராமிய மக்களின் சுகாதாரத்துடன் ஒட்டிக்

காணப்பட்ட அறியாமை மற்றும் மூட நம்பிக்கை என்பவற்றிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்காக பொதுச்

சுகாதார பரிசோதகர்கள் மிகப் பிரதானமான சேவையினை வழங்கினார்கள்.

இலங்கை வரலாற்றில் ஒரு பேரழிவாக காணப்பட்ட மலேரியா நோய் பரவிச் சென்ற 1934, 1935 காலப் பிரிவுகளில்

அதனைக் கட்டுப்படுத்துவதற்காக 1937ஆம் ஆண்டின் மலேரியா தடுப்பு இயக்கத்துடன் இணைந்து துப்பரவேற்பாட்டு

பரிசோதகர்கள் மலேரியா மற்றும் அம்மை ஆகிய நோய்களை ஒழிப்பதற்கு முன்னின்று செயற்பட்டனர்.

பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சேவை கிராமிய அல்லது நகர வெளிக்கள கடமைக்கு மாத்திரம்

வரையறுக்கப்படாது விமான நிலையம், துறைமுகம் போன்ற நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்பட்டதுடன்,

மலேரியா, டெங்கு, காசநோய், வென்குஷ்டம், சுகாதாரப் பணியகம் ஆகிய துறைகளிலும் வியாபித்துக்

காணப்பட்டது.

தற்போது ஓய்வுபெற்றுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தமது சேவைக் காலத்தில் மேற்கொண்ட கடமைப்

பொறுப்புக்களை பாராட்டி அவர்களுக்கான விருதுகள் ஜனாதிபதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, சரத் அமுனுகம, சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் பாலித்த மஹிபால,

பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹண உள்ளிட்ட உறுப்பினர்கள் இவ் வைபவத்தில்

கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

SHARE