தோட்ட தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக 2500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டதையடுத்து மலையக தொழிலாளர்கள் தமது மகிழ்ச்சியை வெளிக்காட்டும் வகையில் அட்டன் செனன் பகுதி தொழிலாளர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்
சம்பள உயர் உடன்படிக்கை இழுபரி நிலையிலிருக்கும் தொழிலாளர்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்தனர் இந் நிலையில் சம்பள பேச்சுவார்தை நிறைவரையும் வரையில் இடைக்கால கொடுப்பனவாக மாதாந்தம் 2500 ரூபாயை வழங்க முன்வந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கும் முற்போக்கு கூட்டனியினருக்கும் நன்றியை தெரிவிக்கும் வகையில் 29.07.2016 வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் அட்டன் பிரதேச தோட்ட மக்கள் மகிழ்ச்சிக்கொண்டாட்டத்தை நடத்தினர்
பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சியை வெளிகாட்டி தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையையில் கடந்த அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு மாத்திரம் சம்பள உயர்வுகளையும் சலுகைகளையும் வழங்கியது தோட்ட தொழிலாளர்களுக்கு எவ்வித நன்மையும் செய்யவில்லை ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு 2500 கொடுப்பனவாக வழங்கியமைக்கும் தொழிலாளர்களின் பொருளாதார நெருக்கடியை உணர்ந்து தமிழ் முற்போக்கு கூட்டனியினால் அரசாங்கத்துடன் கலந்துரையாடி பெற்றுக்கொடுத்தது
சம்பள உடன்படிக்கை நீண்ட காலமாக தீர்வை எட்டாத நிலையில் அதே போல ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு பெற்றுத்தருவதாக கூறிய மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகள் உடனடியாக ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தனர் மேலும்
மஸ்கொளியா பிரதேசத்திலும் தொழிலாளர்கள் மகிழ்சிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடதக்கது