யாழ்ப்பானம் மாவட்டம்; பருத்திதுறை ஹாட்லி கல்லூரியின் பௌதீகவள அபிவிருத்திக்கும் பாடசாலையின் ஏனைய அபிவிருத்திக்கும் கல்வி அமைச்சின் ஊடாக பிரதமர் ரனில் விக்ரமசிங்க அவர்கள் ஆற்றி வரும் சேவைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்பு கிளை பிரதமருக்கான கௌரவிப்பு நிகழ்வு ஒன்றினை கொழுப்பில் நடாத்தியது.
இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அளுவல்கள் அமைச்சர் டி.எம.சுவாமிநாதன் உட்பட ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் அங்கத்தவர்கள் கலந்துக் கொண்;டார்கள.; இதன் போது பிரதமர் அவர்கள் கௌரவிக்கபட்டதுடன் நினைவு சின்னம் ஒன்றும் வழங்கபட்டது.