மஹிந்த மீண்டும் ஆட்சியை பிடிக்க மக்களுக்கான பாதயாத்திரை என கூறிக்கொண்டூ கண்டியிருந்து கொழும்பிற்கு பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர்
இது பாதயாத்திரை இல்லை ரோதை யாத்திரை நடந்து செல்வதே பாதையாத்திர மஹிந்த காரில் செல்கிறார் என மக்கள் விடுதலை முன்னனியின் மத்திய நிலைய தலைவர் வட மத்திய மாகாண மாகாண சபை உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவித்தார்
கடன் சுமை வரிச்சுமை பொருளாதார வீழ்ச்சி எனும் தொனிப்பொருளில் மஸ்கெளியா பிரதேச மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 29.07.2016 வெள்ளிக்கிழமை மஸ்கெளியாவில் மக்கள் விடுதலை முன்னனியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டபோதே இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்து உரையாற்றுகையில்
அன்று மஹிந்த ஆட்சியிலிருக்கும் போது மகன் கார் ஒட்டுவதற்கு புணித இடமான தலதாமாளிகையை சுற்றி வர இடம் கொடுத்தார் தளதாமாளிகையில் தேரர் கார் பந்தயம் நடத்த வேண்டாம் என கூறிய போதும் அதையும் மீறி கார் பந்தயத்தை நடத்தினார் தற்போது அதே தேரரிடம் பாதயாத்திரை செல்ல ஆசீர்வாதம் பெற செல்கின்றார் மஹிந்த மீண்டும் ஆட்சியமைக்கவும் சிரிலங்க சுதந்திர கட்சியை உடைக்கவும் பாதயாத்திரை நடத்தப்படுகின்றது
மஹிந்த அட்சியை மாற்றவும் ஊழல் ஒழிக்கவுமே மைத்திரியை ஜனாதிபதியாக்கினோம் ஆனால் ஜனாதிபதியின் பணிகளையும் பிரதமரே செய்கின்றார்
சிரிலங்க சுதந்திர கட்சியை இரண்டாக உடைக்கும் காய் நகர்த்தலில் ரணில் உதயகம்மன் பில மற்றும் விமல் வீரவண்ச ஆகியோரை ரணில் பயன்படுத்தி தனியான ஆட்சியை அமைக்க ரணில் முயற்சிக்கின்றார் அரசியல் அதிகார போட்டியில் நாட்டில் கடன் சுமை வரிசுமை பொருளாதார வீழ்சியை நாடு சந்தித்து வருகின்றது மஹிந்த மக்களுக்காக பாதையாத்திரை செல்வதாக கூறிக்கொண்டு குருக்கு வழியில் ஆட்சியை கைப்பற்ற முனைவதாகவும் தெரிவித்தார்