பொகவந்தலாவ நகரில் லொறியொன்றில் விற்பனை செய்துகொண்டிருந்த பழுதடைந்த
75 கிலோ மீன்கள் 29-7- 2016 வெள்ளிக்கிழமை பொகவந்தலாவ பகுதி பிரதேச
பொது சுகாதார பரிசோதகர் பி.கே.வசந்த அர்களினால் நடத்தப்பட்ட திடீர்
பரிசோதனையின்போது கைப்பற்றப்பட்டது. கைப்பற்றிய அனைத்தையும்
அழித்ததோடு ஐஸ் இடப்பட்ட ரெஜிபோம் பெட்டிகளில் வைத்து விற்பனை
செய்யாமையினால் குறித்த மீன்கள் பழுதடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.