ஹர்பஜன் சிங் – நடிகை கீதா பாஸ்ராவுக்குப் பெண் குழந்தை!

269

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும் சுழற்பந்து வீச்சாளருமான ஹர்பஜன் சிங்குக்கும் (35), அவரது நீண்டகால தோழியும், பாலிவுட் நடிகையுமான கீதா பாஸ்ராவுக்கும் பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள குருத்துவாராவில் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் இந்தத் தம்பதியருக்குப் புதன்கிழமையன்று லண்டனில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஹர்பஜன் சிங்குக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

SHARE