இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 268 ரன்கள் இலக்கு

276

பல்லகெலே,

ஆஸ்திரேலியா – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பல்லகெலேயில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இலங்கை 117 ரன்களும், ஆஸ்திரேலியா 203 ரன்களும் எடுத்தன. 86 பின்தங்கிய இலங்கை அணி தொடர்ந்து 2–வது இன்னிங்சை ஆடியது. 3–வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 282 ரன்கள் எடுத்திருந்தது. குசல் மென்டிஸ் 169 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த நிலையில் 4–வது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 353 ரன்கள் குவித்து ஆல்–அவுட் ஆனது. இந்த மைதானத்தில் அதிகபட்ச ரன்களை பதிவு செய்த குசல் மென்டிஸ் 176 ரன்களும், ஹெராத் 35 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 268 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இலக்கை நோக்கி 2–வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் (1 ரன்), உஸ்மான் கவாஜா (18 ரன்), ஜோ பர்ன்ஸ் (29 ரன்) அடுத்தடுத்து வெளியேற ஆஸ்திரேலியா திகைப்புக்குள்ளானது. ஆஸ்திரேலிய அணி 27 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்திருந்த போது மழை மற்றும் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது ஸ்டீவன் சுமித் 26 ரன்களுடனும், ஆடம் வோக்ஸ் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு இன்னும் 185 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 7 விக்கெட்டுகளே உள்ளன. இலங்கையின் சுழலை சமாளித்து ஆஸ்திரேலியா வெற்றி பெறுமா? அல்லது அடங்கிப்போகுமா? என்ற எதிர்பார்ப்பை இந்த டெஸ்ட் உருவாக்கியுள்ளது.

SHARE