சிரியா விமான தாக்குதலில் 35 பொதுமக்கள் பலி

283

சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்தின் மீது நடத்திய விமான தாக்குதலில் 7 சிறார்கள் உட்பட 35 பொதுமக்கள் உயிரிழந்தனர்.

பிரிட்டனைச் சேர்ந்த சிரியா மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு இதுதொடர்பாகக் கூறும்போது, “அல் காண்டூர் மீது வியாழக்கிழமை இரவு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தின. இதில், 35 பொதுமக்கள் உயிரிழந்தனர்” என்றார்.

கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்துர்ரகுமான் கூறும் போது, “மேலும் 13 பேர் கொல்லப் பட்டனர். அவர்கள் ஐஎஸ் தீவிரவாதி களா அல்லது குடிமக்களா எனத் தெரியவில்லை” என்றார். இதனிடையே, ஐஎஸ் தீவிரவாதிகள், 24 பேரை கொலை செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

வடக்கு சிரியாவில் குர்திஸ்-அரபு கூட்டுப்படைகள் வசமிருந்த புயிர் கிராமத்தைக் கைப்பற்றிய ஐஎஸ் தீவிரவாதிகள் பொதுமக்களில் 24 பேரைக் கொலை செய்துள்ளனர். இத்தகவலை சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு உறுதி செய்துள்ளது.

SHARE