நாட்டில் பத்தாயிரம் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் (என்ஜிஓ) பதிவு ரத்து செய்யப் பட்டுள்ளது. இதனால் வெளி நாட்டில் இருந்து வரும் நன்கொடை களின் அளவு குறையும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இண்டியாஸ்பெண்ட்’ என்ற அமைப்பு, வெளிநாடுகளில் இருந்து இந்திய தொண்டு நிறுவனங் களுக்கு வரும் நன்கொடைகள் பற்றி ஆய்வு நடத்தி உள்ளது. அந்த ஆய்வில் தெரிய வந்துள் ளதாவது:
கடந்த 2014-15-ம் ஆண்டு இந்திய என்ஜிஓக்களுக்கு வெளிநாடு களில் இருந்து வரும் நன்கொடை இரண்டு மடங்காக அதிகரித்துள் ளது. ஆனால், 2015-ம் ஆண்டு 10,000 என்ஜிஓக்களின் பதிவுகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு நன் கொடைகளின் அளவு குறைந்து விடும்.
இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு நன்கொடையில், டெல்லி, தமிழ்நாடு, ஒருங்கிணைந்த ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் மட்டும் 65 சதவீதம் அளவுக்கு பெறுகின்றன. இத்தகவலை கடந்த 26-ம் தேதி மக்களவையில் சமர்ப்பித்த புள்ளி விவரத்தில் அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் டெல்லி யில் உள்ள என்ஜிஓக்கள் ரூ.10,500 கோடி வெளிநாட்டு நன் கொடைகள் பெற்றுள்ளன. மற்ற 5 மாநிலங்களில் (தெலங்கானா வையும் சேர்த்து) உள்ள என்ஜிஓக்கள் சராசரியாக தலா ரூ.5,000 கோடியை பெற்றுள்ளன.
கடந்த 2015-ம் ஆண்டு நிலவரப் படி, பதிவு ரத்து செய்யப்பட்ட என்ஜிஓக்களை தவிர்த்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பதிவு செய்யப்பட்டுள்ள என்ஜிஓக்களின் எண்ணிக்கை 33,091 ஆக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த நன்கொடை பற்றிய வரவு செலவு கணக்குகளை அரசுக்கு தெரிவிக்காதது, நன்கொடையை தவறாகப் பயன்படுத்தியது, தடை செய்யப்பட்ட நடவடிக்கைகளுக்கு பணத்தை செலவிட்டது போன்ற பல்வேறு காரணங்களுக்காக கடந்த ஆண்டு 10,000 என்ஜிஓக்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2013-14-ம் ஆண்டு இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து ரூ.12,000 கோடி நன்கொடை வந்துள்ளது. இந்தத் தொகை கடந்த 2014-15-ம் ஆண்டு ரூ.22,137 கோடியாக அதாவது 2 மடங்காகி உள்ளது. இந்தியாவில் சுகாதாரப் பணிகள், குழந்தைகள் மேம்பாடு, கல்வி போன்ற சமூக சேவைகளுக்காக 165 நாடுகளில் இருந்து நன்கொடைகள் வருகின்றன.
வெளிநாட்டு நன்கொடைகள் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் கடந்த 2011-12-ம் ஆண்டில் பெறப்பட்ட தொகை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் அந்த ஆண்டு மொத்தம் 12,000 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளது. அதில், சுகாதாரம், கல்வி மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு சேவைகளுக்காக மட்டும் 4,500 கோடி நன்கொடை வந்துள்ளது தெரியவந்தது.
மதத்துடன் தொடர்புடைய என்ஜிஓக்களுக்கு, கடந்த 2011-12-ம் ஆண்டு ரூ.870 கோடி நன்கொடைகள் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளன. ஆராய்ச்சி யில் ஈடுபட்டு வரும் என்ஜிஓக்கள் அதே ஆண்டில் ரூ.539 கோடி நன்கொடையை வெளிநாடுகளில் இருந்து பெற்றுள்ளனர்.
சர்வதேச என்ஜிஓக்கள் இந்தியாவுக்கு நன்கொடை வழங்க சுதந்திரம் அளிக்கப்பட்டிருந் தாலும், அந்த தொகையை அரசிடம் மட்டுமே வழங்க முடியும்.
ஐ.நா.வின் பல்வேறு பிரிவுகள், உலக வங்கி, உலக சுகாதார நிறுவனம், சர்வதேச நிதியம், உலக வர்த்தக அமைப்பு, ஆசிய மேம்பாட்டு வங்கி உட்பட 109 சர்வதேச அமைப்புகள் இந்தியாவில் சமூக திட்டங்களை நிறைவேற்ற நிதி ஒதுக்கினாலும் அவற்றை வெளிநாட்டு நன்கொடை ஆதாரமாக கருதுவதில்லை.
கடந்த 2013-14-ம் ஆண்டு உலக வங்கி இந்தியாவுக்கு ரூ.33,000 கோடி நிதி அளித்துள்ளது. இந்த தொகை எந்த என்ஜிஓக்களும் செல்லாமல் அரசுக்கு சென்றது என்று ‘அசோசியேஷன் ஆப் டெமாக்ரடிக் ரிபார்ம்ஸ்’ (ஏடிஆர்) பேராசிரியர் திரிலோச்சன் சாஸ்திரி எழுதியுள்ளார்.
மேலும், வெளிநாட்டு நன்கொடைகள் (கட்டுப்பாட்டு) சட்டம் 2010-ஐ கடுமையாக அமல்படுத்தவும் கண்காணிக்கவும் தனி அதிகாரம் படைத்த அமைப்பை உருவாக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஏடிஆர் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு ‘இண்டியாஸ் பெண்ட்’ அமைப்பு தெரிவித் துள்ளது.