திருமணம் செய்யும் வயது பூர்த்தியாகாத இளம் யுவதியை கர்ப்பமாக்கிய இளைஞர் ஒருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆராச்சிக்கட்டு- ஆடிப்பல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்ட ரீதியாக திருமணம் செய்யாது பால்ய வயது யுவதி கர்ப்பமடைந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த தகவலை அடுத்து, சிலாபம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
15 வயதான யுவதியே இளைஞரால் கர்ப்பமாக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.