மைத்திரியின் இல்லத்தில் மஹிந்த!

240

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வசிக்க உள்ளார்.

ஓய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவருக்கு இலங்கை அரசியல் அமைப்பின் அடிப்படையில் உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் வாகனங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியமானதாகும்.

இதன் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட வேண்டிய உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டுள்ளது.

விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள இந்த இல்லம், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் தங்கியிருந்த இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இல்லம் சுமார் 30 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமக்கு உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்கள் உரிய முறையில் வழங்கப்படவில்லை என மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.mr-house

SHARE