அமைச்சரவை அந்தஸ்த்துள்ள மூன்று அமைச்சுக்களுக்கு புதிதாக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்று (01)
முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் திரு. பீ.பி.அபேகோன் அவர்களிடமிருந்து தமது நியமனக்
கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
வெளிவிவகார அமைச்சு, பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு, தபால் சேவைகள் அமைச்சு ஆகிய மூன்று
அமைச்சுக்களுக்கே புதிதாக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக திரு.எசல வீரகோன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின்
இராஜதந்திர சேவையில் உள்ள சிரேஷ்ட அதிகாரியான எசல வீரகோன் அவர்கள் 1988இல் வெளிவிவகார சேவையில்
இணைந்துகொண்டதுடன், அவர் பல நாடுகளில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் புதிய செயலாளராக ஜே.ஜே.ரத்னசிறி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன்,
தபால் சேவைகள் அமைச்சின் புதிய செயலாளராக டீ.ஜீ.எம்.வீ. ஹபுஆரச்சி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமனக் கடிதங்களை வழங்கிவைத்ததன் பின்னர் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் புதிதாக நியமனம்
பெற்றுள்ள செயலாளர்களுடன் சுமூகமான ஒரு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு