விக்ரம் நடித்துள்ள இருமுகன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் புதிய அறிவிப்பை வெளியிட்டார் இயக்குநர் ஹரி.
இந்த விழாவில் அவர் பேசியதாவது:
விக்ரமுடன் இணைந்து சாமி 2 படத்தை விரைவில் தொடங்க உள்ளேன். படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை, பிரியன் ஒளிப்பதிவு என்று தகவல் அளித்துள்ளார்.
இதற்கு முன்பு வெளிவந்த இரு பாகங்களும் வெற்றி பெற்றதால் சூர்யா – இயக்குநர் ஹரி கூட்டணியில் எஸ் 3 (சிங்கம் 3) உருவாகி வருகிறது. இதற்கடுத்து விக்ரம் – ஹரி கூட்டணியில் சாமி 2 தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2003-ல் வெளிவந்த சாமி சூப்பர் ஹிட் ஆனது. சாமி 2 படத்தைப் பற்றிய இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே இப்போதிருந்தே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.