‘கபாலி’ புயலுக்குப் பிறகு வெளியே வரும் திரைப்படங்கள்!

239

ரஜினி நடித்த கபாலி ஜூலை 22-ம் தேதி வெளியானது. இதையொட்டி பல படங்களின் வெளியீட்டுத் தேதிகள் தள்ளிப் போயின.

ஜோக்கர், தொடரி, தர்மதுரை போன்ற படங்கள் ஜூலையில் வெளியாக இருந்த நிலையில் கபாலி படத்தால் வெளியாகத் தாமதம் ஆயின.

இப்போது கபாலி புயல் கரையைக் கடந்துவிட்டதால் அடுத்ததாக ஒவ்வொரு படங்களாக வெளியாகத் தயாராகிவிட்டன. ஆகஸ்ட் 12-ம் தேதி இயக்குநர் ராஜூமுருகனின் ஜோக்கர் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து விஜய் சேதுபதி நடித்துள்ள தர்மதுரை, கே.எஸ். ரவிகுமார் இயக்கியுள்ள முடிஞ்சா இவனை பிடி, விக்ரம் பிரபுவின் வாகா, தனுஷின் தொடரி போன்ற படங்களும் ஆகஸ்ட் 12 அன்று வெளியாகத் தயாராகியுள்ளன. இந்தப் படங்களின் வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.dharmadurai12

SHARE