சிம்புவுக்கு ஜோடியா? ஹன்சிகா மறுப்பு

225

த்ரிஷா இல்லனா நயன்தாரா இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் சிம்புவும் இணைகிற அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தில் ஹன்சிகா நடிக்க உள்ளதாகச் செய்திகள் வெளிவந்தன.

ஆனால், இத்தகவலை அவர் மறுத்துள்ளார். ஹன்சிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இதுபோன்ற செய்திகள் எல்லாம் வதந்திகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் சிம்பு. அவதார் போன்ற முக்கியமான படங்களில் பணியாற்றிய ஒப்பனைக் கலைஞர் ஷான் ஃபுட், தற்போது ஷங்கரின் 2.0 படத்தில் மட்டுமில்லாமல் சிம்பு – ஆதிக் இணைகிற இந்தப் படத்திலும் பணியாற்றி வருகிறார்.vaalu

SHARE