ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களை விசேட கலந்துரையாடலுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்திலேயே இந்த அவசர ஒன்று கூடல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை குறித்த கலந்துரையாடலானது அடிக்கடி இடம்பெறும் ஒன்று எனவும் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தலைமையில் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி தரப்பு செய்திகள் தெரிவித்துள்ளன.