டிரம்ப்பின் ‘சாத்தான்’ ஒப்பீட்டால் சர்ச்சை

276

குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் தொடர்ந்து ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக வசைபாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரில் நேற்று (திங்கள்கிழமை) நடந்த பேரணியில் உரையாற்றிய டிரம்ப், “ஜனநாயக கட்சியின் சார்பாக அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியில் ஹிலாரி கிளின்டனுடன் போட்டியிட்ட பெர்னி சாண்டர்ஸ், ஹிலாரிக்கு பணிந்து அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் மூலம் பெர்னி சாண்டர்ஸ் ஒரு சாத்தனுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்” என்றார்.

பேரணியில் டொனால்டு டிரம்பின் பேச்சை ஏற்று கொள்ளமுடியாமல் சிலர் வெளியே சென்றனர. அவர்களை டிரம்பின் ஆதரவாளர்கள் வலுக்கட்டாயமாக அமர வைத்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் ஒமாஹா பகுதியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற ஹிலாரி கிளின்டன், “டொனால்டு டிரம்ப் அமெரிக்கர்களை மதிக்காதவர், அமெரிக்க அதிபர் வேட்பாளர்களில் போட்டியிடும் அனைத்து பிரதிநிதிகளும் தங்களுடைய வருமான வரி விபரங்களை வெளியிட்டுள்ளனர். டொனால்டு டிரம்ப் தன்னுடய வுருமான வரி விபரங்களை வெளியிடாமல் தொடர்ந்து மறைத்து வருகிறார்.

டொனால்டு டிரம்ப் இனி தன்னுடைய வருமான வரி பற்றிய விவரங்களை மறைக்க முடியாது. டொனால்டு டிரம்பின் பேச்சை கூர்ந்து கவனித்தாலே போது, அவருடைய எண்ணங்களும் செயல்களும் உழைக்கும் மக்களுக்கானது இல்லை என்று தெரிந்து கொள்ளலாம். டொனால்டு டிரம்ப் நமது நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் போலிஸார், ராணுவ வீர்ர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், விஞ்ஞானிகள் என அனைவரையும் மறந்து விட்டார்.

உழைக்கும் மக்களுடன் நிற்பதற்கான காலம் வந்துவிட்டது. உழைக்கும் மக்களுடன் நிற்கும் கனவைத்தான் கடந்த 32 ஆண்டுகளாக நானும் எனது கணவர் பில் கிளின்டனுன் இணைந்து கண்டு வந்தோம். அக்கனவு தற்போது நினைவாகப் போகிறது.

ஒமாஹா பொது கூட்டத்தில் ஹிலாரி கிளிண்டன்

அமெரிக்கர்கள் பலவீனமானவர்கள் அல்ல. உலகிலேயே சிறந்த நாடு அமெரிக்கா. நம் முன்னே ஏராளமான பிரச்சனைகளும், சவால்களும் உள்ளன. ஆனால் அவற்றை எதிர்கொள்ள அமெரிக்கர்கள் தயாரான நிலையில் உள்ளனர். தற்போது நமக்கான தேவை என்பது ஒற்றுமையுடன் இருப்பது மட்டுமே” என்று கூறினார்.

SHARE