திடீர் திருப்பங்களுக்கு சுவாதி கொலை வழக்கில் குறைவே இல்லை.
சுவாதி தந்தையான கோபாலகிருஷ்ணன் அவரது உண்மையான தந்தையா, வளர்ப்புத் தந்தையா? சுவாதி கொலையுண்ட இடத்திற்கு வந்த கோபாலகிருஷ்ணன் அழவில்லை.
அவரது சித்தப்பா செல்போனில் சுவாதியின் வெட்டுப்பட்ட உடம்பை பல கோணங்களில் படம் எடுத்துக் கொண்டிருந்தார்.
கோபாலகிருஷ்ணன் மனைவியின் தங்கைக்கு பிறந்தவர்தான் இந்த சுவாதியும், அவரது அக்கா நித்யாவும்.
அவர்களை கோபாலகிருஷ்ணன் தத்தெடுத்து வளர்த்தார் என இணையதளங்களில் செய்தி வெளியானது.
இன்னும் சில மீடியாக்களில் சுவாதிக்கு பெங்களூரில் பிலால் மாலிக் மூலம் இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள்.
அவர்களில் சிலர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சுவாதி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என செய்திகள் வெளியாகின.
இதெல்லாம் கட்டுக் கதை என்றார்கள் விசாரணை போலீசார். ஸ்ரீரங்கத்திலுள்ள சுவாதியின் உறவினர்களைக் கேட்டோம்.
சுவாதியின் அப்பா கோபாலகிருஷ்ணனின் மனைவி பெயர் ரங்கநாயகி. அவர்களுக்கு சுவாதி, நித்யா என இரண்டு பெண்கள்தான்.
ரங்கநாயகியின் தங்கைக்கு இரண்டு ஆண் குழந்தைகள் என்றதுடன் அந்தப் பையன்களோடு சுவாதி இருக்கும் படத்தைக் காண்பித்தனர்.
பிராமணர் குடும்பங்களில் உறவுமுறைகளை அழைக்கும் விதம் மாறுபட்டதாக இருக்கும். அதை வைத்து குழம்பிப் போன ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கிறது என்கிறார்கள்.
இதற்கிடையே வருகிற 8-ம் தேதி ராம்குமாரை சிறையிலிருந்து அழைத்து வந்து அவரை சுவாதி கொலையுண்ட நுங்கம்பாக்கம் ரயில் நிலையம், அதையொட்டிய தெருக்களில் நடக்க வைத்து வீடியோ படமெடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அத்துடன் உடைந்த பாட்டில் சில்லுகள் பொருத்தப்பட்ட ரயில் நிலைய சுவர்களில் சிந்தியிருந்த இரத்த மாதிரிகளை சேகரித்த போலீசார் அவற்றையும் ராம்குமாரின் இரத்த மாதிரியையும் ஒப்பிட்டுப் பார்க்க திட்டமிட்டிருந்தனர்.
ராம்குமாரின் கையெழுத்து மாதிரிகளையும் எடுக்க போலீசார் திட்டமிட்டு, கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
அதை எதிர்த்து ராம்குமாரின் வழக்கறிஞர்கள் மனு போட்டனர்.
ராம்குமாரை விசாரிப்பதில் சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடு களை காவல்துறை மேற்கொள்கிறது எனக் குற்றம் சாட்டுகின்றனர்
அவரது வழக்கறிஞர்கள்.போலீஸ் தரப்போ, தன் போக்கிலிருந்து மாறவில்லை.
புழல் சிறையில் உள்ள ராம்குமாரிடமிருந்து கடந்த 30-ந் தேதியன்று இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.