ஒரே நாளில் ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, குருப்பெயர்ச்சி, ஒன்பதின் இரகசியம் தெரியுமா?

268

ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, குருப்பெயர்ச்சி என்பன இன்று ஒன்றாக இணைந்து வருகின்றது.

ஆடி அமாவாசை அன்று கோயில் குளம், நதிக்கரை, கடல் போன்ற நீர்நிலைகளுக்குச் சென்று நீராடி, நம் முன்னோர்களுக்கு எள்ளும், நீரும் விட்டு தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.

பின்னர் வீட்டில் முன்னோர் படங்களுக்கு மலர்ச்சரம் அணிவித்து, அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளுடன், பூசணிக்காய், வாழைக்காய் போன்ற காய்கறிகளையும் சமைத்து படைக்க வேண்டும்.

பின்னர் காகங்களுக்கும், அதிதிகளுக்கும் உணவளித்து அதன் பிறகே நாம் உண்ணவேண்டும். இப்படிச் செய்தால், முன்னோர்களுடைய ஆசிகள் நமக்குப் பூரணமாகக் கிடைக்கும்.

பயிர் செழிக்க வளம் அருளும் நீருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆற்றங்கரைகளிலும், நதிக்கரைகளிலும் ஆடிப் பெருக்கை மக்கள் கொண்டாடுகிறார்கள்.

குருப்பெயர்ச்சி பலன்களை தெரிந்து கொள்ள க்ளிக் செய்யவும்

ஆடி மாதம், 18-ம் நாளை கணக்கில் கொண்டு கொண்டாடப்படும் விழா ஆடிப்பெருக்கு.

ஆடி மாதம் காவிரியைச் சுற்றியுள்ள, 18 படித்துறைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் என்பதால், இந்த 18ஐ கணக்கில் கொண்டு ஆடி 18ம் நாளை ஆடிப்பெருக்காக கொண்டாடுகிறார்கள்.

முக்கியமாக, காவிரி நதிக்கரையோரங்களில் உள்ள ஊர்களில், இவ்விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. மேட்டூர் அணை, பவானி கூடுதுறை, ஈரோடு, பரமத்தி வேலூர், குளித்தலை, திருச்சி, தஞ்சை, புகார் ஆகிய இடங்கள் ஆடிப் பெருக்கு விழாவிற்கு மிகவும் சிறப்புமிக்க இடங்கள் ஆகும்.

மேலும் ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபம் படித்துறையில் இவ்விழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அது தவிர, நெல்லை, மதுரை, கோவை, தேனி மாவட்டத்திலும் பரவலாக கொண்டாடப்படுகிறது.

ஆடி அமாவாசையும் ஆடிப்பெருக்கும் வரும் அதேநாளில் தான் குருப்பெயர்ச்சியும் வருகிறது. குரு ஒருவரின் ராசிக்கு நல்ல இடத்தில் வரும்போது நிச்சயம் நல்ல பலனைத் தருவார். அதனால்தான் எல்லோரும் ஆர்வமாக குருப்பெயர்ச்சி பலன்களை எதிர்பார்க்கின்றனர்.

துர்முகி வருடம், ஆடிமாதம் 18-ம் நாள் (2.8.2016) செவ்வாய்க்கிழமை, காலை 9.27 மணிக்கு உத்திரம் நட்சத்திரம் 2ஆம் பாதத்தில் கன்னி ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிறார். நவக்கிரகங்களில், சுப கிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் குருபகவான். அவரது அருள் நமக்கு எப்பொழுதும் தேவை.

download (2)
SHARE