இஸ்லாமியவாதிகளால் கொல்லப்பட்ட 84 வயதான பாதிரியார் ஷாக் ஹமலுக்கு, பிரான்சின் ரூவென் பேராலயத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கின்போது, பலரும் அஞ்சலி செலுத்தினர்.
அவருடைய வாழ்க்கை முழுவதையும் கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டார். அன்பையும், சகிப்புத் தன்மையையும் விதைத்திருக்கிறார் என்று, கொல்லப்பட்ட பாதிரியாரின் சகோதரி ரோஸ்லின் தன்னுடைய சகோதரர் பற்றி தெரிவித்திருக்கிறார்.
அனைவரும் அவருடைய பணியை தொடர்ந்து ஆற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினருக்கு விசுவாசமான பிரெஞ்சு பதின்ம வயதினர் இருவரால் இந்த பாதிரியார் ஆலயத்தில் வைத்து கொல்லப்பட்டார்.
ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட அவருடைய இறுதி சடங்கின்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பேராலயத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த ராட்சத திரையிலும் இறுதிச் சடங்கு நிகழ்வை பலர் பார்த்தனர்.