துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு மேற்குலக கூட்டணி நாடுகள் ஆதரவு: எர்துவான் குற்றச்சாட்டு

319

துருக்கியில் கடந்த மாதம் தோல்வியில் முடிந்த ராணுவ ஆட்சி கவிழ்ப்பிற்கு மேற்கத்திய கூட்டாளி நாடுகள் ஆதரவு அளித்தன என்று அதிபர் எர்துவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், மேற்கத்திய நாடுகள் ஜனநாயகத்தின் பக்கம் நிற்கிறார்களா அல்லது தீவிரவாதத்தின் பக்கம் நிற்கிறார்களா என்று கேள்வியெழுப்பினார்.

வார இறுதியில்,கொலோன் நகரில் தனது ஆதரவாளர்களின் பேரணியில் காணொளி மூலமாக உரை நிகழ்த்த தன்னை அனுமதிக்காத ஜெர்மனியை அவர் கண்டித்தார்.

அவர் மேலும், நாடு கடத்தப்பட்ட மதகுரு பெதுல்லா குயுலெனை அமெரிக்கா ஒப்படைக்க இரண்டாவது முறையாக துருக்கி வேண்டுகோள் விடுத்தும் அமெரிக்கா திருப்பி அனுப்பாமல் இருப்பதை விமர்சித்தார்.

அதே நேரத்தில், தன் மீதான குற்றச்சாட்டைஃபெதுல்லா குலென் மறுத்துள்ளார்.160731001021_erdog_2956539g

SHARE