தாய், மகள் மாயம்: ரஜினியை பார்க்கச் சென்றனரா?  

264

புதுவை தென்றல் நகர் சின்னய்யன்பேட் பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (48). கிரில் பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி தேவமணி (43), மகள் சங்கீதா (20). கடந்த 31ஆம் தேதி சங்கீதாவுக்கு பிறந்த நாள் என்பதால் ஆடை வாங்க நேரு வீதிக்கு, மகளுடன் தேவமணி வந்துள்ளார்.
ஆனால் அதன்பிறகு வீட்டுக்குச் செல்லவில்லை. இதனையடுத்து புருஷோத்தமன் டி.நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
தேவமணி தீவிர ரஜினி ரசிகர் என்று கூறப்படுகிறது. கபாலி படம் பார்த்ததில் இருந்து ரஜினியைச் சந்திக்க வேண்டும் என்று அடிக்கடி அவர் கூறுவாராம். மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.
இதனால் தேவமணியும் சங்கீதாவும் ரஜினியைப் பார்க்க சென்னை சென்றார்களா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.2

SHARE